ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: காலிறுதியில் ஓமனை வீழ்த்தியது இந்தியா- 9-0 என்ற கோல் கணக்கில் அபாரம்

By பிடிஐ

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி யது. இந்திய அணி தரப்பில் ஹர்மான் பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

8வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் ஆட்டங்களில் ஜப்பான், மலேசியா, சீனா அணிகளை தோற்கடித்து 9 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியிருந்தது.

இந்நிலையில் காலிறுதி ஆட்டத் தில் இந்திய அணி நேற்று ஓமன் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்மான்பிரீத் 7, 12 மற்றும் 50வது நிமிடங்களிலும், அர்மான் குரேஷி 10வது நிமிடத்திலும், குர்ஜாந்த் சிங் 18வது நிமிடத்திலும், சாண்டா சிங் 22வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 30வது நிமிடத்திலும், ஹர்ஜித்சிங் 45வது நிமிடத்திலும், முகமது உமர் 54வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மான்பிரித் சிங் கோலாக மாற்றினார். 15வது நிமிடத் தில் மீண்டும் பெனால்டி கார்னர் மூலம் ஹர்மான்பிரித் கோல் அடிக்க இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது. அதன் பின்னர் ஓமன் வீரர்களின் தடுப்புகளை மீறி அடுத்தடுத்து இந்திய அணி 4 கோல்கள் அடித்து மிரட்டியது.

இந்த கோல்களை அர்மான், குர்ஜாந்த், சாண்டா, மன்தீப் ஆகி யோர் அடித்தனர். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 6-0 என முன் னிலை வகித்தது. 2வது பாதி தொடங் கிய 11வது நிமிடத்தில் இந்தியா 7வது கோலை அடித்தது. இந்த கோலை ஹர்ஜித் அடித்தார். சிறிது நேரத்தில் ஹர்மான்பிரீத் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்.

54வது நிமிடத்தில் உமர், பீல்டு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை நடைபெறும் அரை யிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்