2009-ல் இருந்த மகிழ்ச்சி குறையவில்லை: தோனியை சந்தித்தபின் ஜடேஜா உற்சாகம்

By ஏஎன்ஐ

கடந்த 2009-ம் ஆண்டில் தோனியை முதன்முதலில் சந்தித்தபோது இருந்த மகிழ்ச்சி, உற்சாகம் இப்போது சந்தித்தபோது இருக்கிறது என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் தொடரிலிருந்து ஜடேஜா விலகினார். ஏறக்குறைய 2 மாதங்கள் ஓய்வில்இருந்த ஜடேஜா காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்தநிலையில் ஐபிஎல் தொடருக்குத் தயாராகியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் இணைந்து பயிற்சி பெறுவதற்கு முன்பே, ஜடேஜா தனது பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சியை மார்ச் மாதமே தொடங்கிவிட்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி ஜடேஜாவுக்கு தகுதிச் சான்று அளித்ததையடுத்து, முழுமையாக போட்டிக்குத் தயாராகியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மும்பை முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சிஎஸ்கே அணியின் பயோ பபுள் சூழலுக்குச் செல்லும் முன் ஒருவாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறையாகும்.

கடந்த வாரம் மும்பை சென்ற ரவிந்திரஜடேஜா ஒருவாரம் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், நேற்று சிஎஸ்கே அணியில் முறைப்படி இணைந்து, பயோ-பபுள் சூழலுக்குள் சென்றார். தோனி, ரெய்னா, தீபக் சஹர் உள்ளிட்டோரைச் சந்தித்து ஜடேஜா மகிழ்ந்தார்.

அதுகுறித்து ஜடேஜா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " நான் எப்போது தோனியைச் சந்தித்தாலும், என்னுடைய சந்தோஷம், உற்சாகம், எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். நான் தோனியை முதன் முதலில் கடந்த 2009-ம் ஆண்டு சந்தித்தபோது, எனக்கு எப்படி உற்சாகம், சந்தோஷம் இருந்ததோ அதேபோன்று இப்போதும் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடத சுரேஷ் ரெய்னாவுடன், ஜடேஜா சந்தித்துப் பேசினார். அந்தப் புகைப்படத்தையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

வலைஞர் பக்கம்

24 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

30 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்