கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் டி20: சச்சின், ஷேன் வார்ன் அணி வீரர்கள் விவரம்

By ஐஏஎன்எஸ்

சனிக்கிழமை நியூயார்க் சிட்டி பீல்ட் மைதானத்தில் சச்சின், வார்ன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.

சச்சின் பிளாஸ்டர்ஸ், வார்ன் வாரியர்ஸ் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சச்சின் தனது அணியில் பிரையன் லாரா, சேவாக், கங்குலி மற்றும் கிளென் மெக்ரா, கர்ட்லி ஆம்புரோஸ், ஷான் போலாக், முரளிதரன், ஷோயப் அக்தர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை தேர்வு செய்ய, ஷேன் வார்ன், முன்னாள் ஆஸ்திரேலிய சகாக்களான, ஹெய்டன், ரிக்கி பாண்டிங், சைமண்ட்ஸ், ஆகியோரோடு கனவு வேகப்பந்து கூட்டணியான வால்ஷ், ஆலன் டோனல்ட், வாசிம் அக்ரம் உள்ளிட்டோரை தனது அணியில் தேர்வு செய்துள்ளார்.

“இத்தகைய அபாரமான வீரர்களுடன் ஒரே அறையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. களத்துக்கு வெளியே நாங்கள் சிறந்த நண்பர்கள், ஆனால் களத்துக்குள்ளே போட்டி மனப்பான்மை வாய்ந்தவர்கள், மீண்டும் ஷேன் வார்ன் பந்து வீச்சை எதிர்கொள்வதில் ஆர்வம் அதிகமாக உள்ளது” என்று சச்சின் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அணி விவரம்

சச்சின் பிளாஸ்டர்ஸ்: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), லஷ்மண், கங்குலி, விரேந்திர சேவாக், பிரையன் லாரா, மகேலா ஜெயவர்தனே, கார்ல் ஹூப்பர், லான்ஸ் குளூஸ்னர், ஷான் போலக், மொயின் கான், கிரேம் ஸ்வான், கிளென் மெக்ரா, முத்தையா முரளிதரன், ஷோயப் அக்தர், கர்ட்லி ஆம்புரோஸ்.

வார்ன் வாரியர்ஸ்: ஷேன் வார்ன் (கேப்டன்), ஹெய்டன், பாண்டிங், மைக்கேல் வான், ஜாக் காலிஸ், குமார் சங்கக்காரா, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஜாண்ட்டி ரோட்ஸ், சக்லைன் முஷ்டாக், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, கார்ட்னி வால்ஷ், ஆலன் டோனல்ட், அஜித் அகார்கர்.

நாளை இரவு முதல் போட்டி நடைபெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்