ரிக்கி பாண்டிங், தோனி, வெங்சர்கர் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? 

By செய்திப்பிரிவு

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரின் சாதனையை அகமதாபாத்தில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கிய கேப்டன் கோலி, மனைவிக்குப் பிரசவ காலம் என்பதால் விடுப்பில் சென்றார். இதனால் 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் விராட் கோலி இதுவரை 2 அரை சதங்கள் அடித்துள்ளார். ஆனால், சதம் அடிக்கவில்லை. கடந்த 10 இன்னிங்ஸ்களாக கோலி சதம் அடிக்காமலேயே டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

கேப்டனாக இருந்து சர்வதேசப் போட்டிகளில் அதிகமான சதங்களை அடித்தவர்கள் வரிசையில் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு இணையாக கோலி உள்ளார். இருவரும் தற்போது 41 சர்வதேச சதங்களுடன் உள்ளனர். கோலி டெஸ்ட் போட்டியில் மட்டும் 28 சதங்களை அடித்துள்ளார்.

நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்தால், ரிக்கி பாண்டிங்கின் 41 சர்வதேச சதங்களை கோலி முறியடித்து 42-வது சதம் அடித்த பெருமையைப் பெறுவார்.

தோனியின் சாதனை

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றவர்கள் வரிசையில் தோனியின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். உள்நாட்டில் 21 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று கோலியும், தோனியும் சமநிலையில் உள்ளனர்.

அகமதாபாத்தில் மொட்டீரா மைதானத்தில் நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தினால், உள்நாட்டில் 22 வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையைப் பெறுவார்.

உள்நாட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் தோனி, கோலிக்கு அடுத்தாற்போல் முகமது அசாருதீன் (13), சவுரவ் கங்குலி (10), சுனில் கவாஸ்கர் (7) ஆகியோர் உள்ளனர்.

வெங்சர்கரின் மைல்கல்

தற்போது விராட் கோலி, உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 3,703 ரன்கள் குவித்துள்ளார். உள்நாட்டில் அதிகமான ரன்களைக் குவித்த இந்திய வீர்களில் திலிப் வெங்சர்கர் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 23 ரன்கள் மட்டுமே தேவை. நாளை தொடங்கும் போட்டியில் அந்த சாதனையை முறியடிப்பார் என நம்பலாம்.

ஆயிரம் ரன்கள்

இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியி்ல 1,000 ரன்களை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 12 ரன்களும், புஜாராவுக்கு 45 ரன்களும் தேவைப்படுகிறது. நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில், கோலி ஆயிரம் ரன்களைக் கடப்பார் என நம்பலாம்.

இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களுக்கு மேலாக, சுனில் கவாஸ்கர் (1,331), குண்டப்பா விஸ்வநாத் (1,022) ஆகியோர் மட்டுமே சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

வணிகம்

31 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்