விளையாட்டாய் சில கதைகள்: நிலாவில் விளையாட்டு

By பி.எம்.சுதிர்

விளையாட்டுப் போட்டிகளை தரையில் நடத்தலாம். தண்ணீரில் நடத்தலாம். ஆனால் நிலவில் நடத்த முடியுமா?

முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் ஆலன் ஷெப்பர்ட், எட்கர் மிட்செல் ஆகிய விண்வெளி வீரர்கள். 1971-ம் ஆண்டில் அப்போலோ 14 என்ற விண்கலம் மூலம் நிலவுக்கு சென்ற இவர்கள் இருவருக்கும் நிலவில் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் ஆசை எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஆலன் ஷெப்பர்ட், விண்வெளியில் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். எட்கர் மிட்செல் ஈட்டியை எறிந்து விளையாடியுள்ளார். இதன்மூலம் நிலவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

நிலவில் விளையாடிய அனுபவத்தைப் பற்றி பின்னாளில் கருத்து தெரிவித்த மிட்செல், “நாங்கள் நிலவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற நாளை, முதலாவது லூனார் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கலாம்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் நிலவில் ஷெப்பர்ட் அடித்த பந்தைவிட, தான் வீசிய ஈட்டி 4 அங்குலம் முன்னால் போய் விழுந்ததாகவும் மிட்செல் கூறியுள்ளார். இந்த விளையாட்டின்போது ஷெப்பர்ட் அடித்த பந்தும், மிட்செல் வீசிய ஈட்டியும் இன்னும் நிலவு வெளியில் மிதந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஷெப்பர்ட் பயன்படுத்திய கோல்ஃப் ஸ்டிக் மட்டும் இன்னும் நியூஜெர்ஸியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1998-ம் ஆண்டில் காலமான இந்த 2 விண்வெளி வீரர்களும் விண்வெளியில் விளையாட்டு வீரர்களாக மாறியதுடன், அங்கு அறிவியல் சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அத்துடன் 2 முறை நிலவு வெளியில் நடைபயின்றும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்