நான் உதவத் தயார்; இந்திய அணியில் இணைந்து கொள்ளவா?- வீரேந்திர சேவாக் கிண்டல்

By செய்திப்பிரிவு

இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அனைவரும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்திய அணிக்கு உதவத் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் ஆஸ்திரேலியா செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று நகைச்சுவையாக முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணம் சென்றதில் இருந்து இந்திய அணியின் ஓய்வறை மினி மருத்துவமனையாகவே மாறிவிட்டது. ஆஸி. பயணத்துக்குத் தேர்வான இசாந்த் சர்மா காயத்தால் விலகினார். அதைத் தொடர்ந்து மனைவிக்குப் பிரசவம் காரணமாக விராட் கோலியும் முதல் டெஸ்ட்டோடு நாடு திரும்பினார்.

முதல் டெஸ்ட்டில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அதைத் தொடர்ந்து உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், ஹனுமா விஹாரி, ஜஸ்பிரித் பும்ரா என வரிசையாக வீரர்கள் காயத்தால் தொடரிலிருந்து விலகிவிட்டனர்.

இதனால் பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் எந்தெந்த வீரர்களுடன் இந்திய அணி விளையாடப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்ததன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் பிரிஸ்பேனில் நடக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் காயத்தால் இந்திய அணியின் பல வீரர்கள் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்து ட்விட்டரில் நகைச்சுவையாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்திய அணியில் களமிறங்க 11 வீரர்கள் இல்லாவிட்டால் நான் இந்திய அணிக்கு உதவத் தயாராக இருக்கிறேன். இந்திய அணியில் இணையவும் தயார். ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படவும் தயாராக இருக்கிறேன். ஆனால், எனக்கு அங்கு தனிமைப்படுத்தும் விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேவாக் என்றாலே எதிரணி பந்துவீச்சாளர்கள் மிரள்வார்கள். எந்தப் பந்துவீச்சாளரின் மன வலிமையையும் குலைக்கும் வகையில் பேட்டிங் செய்யும் அதிரடி ஆட்டக்காரராக சேவாக் இருந்தார். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சேவாக், 2 முறை முச்சதங்களை அடித்துள்ளார். நவாப் ஆஃப் நஜாப் கார்க் என்று அழைக்கப்படும் சேவாக் 8,536 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் குவித்துள்ளார். 50 ரன்கள் சராசரி வைத்துள்ள சேவாக் டெஸ்ட் போட்டியில்கூட ஸ்ட்ரைக் ரேட் 82.23 என வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

25 mins ago

சுற்றுச்சூழல்

35 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

51 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்