பாக்ஸிங் டே டெஸ்ட்: ரஹானே அற்புதமான சதம் : ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தி மிட்ஷெல் ஸ்டார்க், பெய்ன் முக்கிய மைல்கல்

By ஏஎன்ஐ

மெல்போர்னில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும், வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் ஆட்டம் மெல்போர்னில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்துள்ளது.

அபாரமாக ஆடிவரும் கேப்டன் ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12-வது சதத்தை நிறைவு செய்து 104 ரன்களுடன் உள்ளார். துணையாக ஆடி வரும் ஜடேஜா அரை சதத்தை நோக்கி 38 ரன்களுடன் களத்தில் உள்ளார். 85 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய அணியைவிட 61 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில், ரிஷப் பந்த் விக்கெட்டை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் வீழ்த்தியபோது, ஆஸி.யின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 250 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய 5-வது ஆஸி.வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

ஸ்டார்க் தனது 59-வது ஆட்டத்தில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த மைல்கல்லை எட்டினார். ஆஸி. வீரர் டென்னிஸ் லில்லி 48 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தாலும், கடந்த 2017-ம் ஆண்டில் லில்லியின் சாதனையை அஸ்வின் தகர்த்தார். அதாவது 45 ஆட்டங்களில் அஸ்வின் 250 விக்கெட்டுகளை எட்டினார்.

ஷேன் வார்ன், மெக்ராத் ஆகியோர் 55-வது ஆட்டத்தில் 250 விக்கெட்டுகளை எட்டினர். மிட்ஷெல் ஸ்டார்க் 57 ஆட்டங்களில் இந்த சாதனையைச் செய்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் இந்த ஆட்டத்தில் முக்கியச் சாதனையைச் செய்தார். மிக விரைவாக 150 டிஸ்மிஸல்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த முதல் வீரர் எனும் பெருமையை டிம் பெய்ன் பெற்ரார்.

ரிஷப் பந்த் விக்கெட்டில் கேட்ச் பிடித்தபோது, இந்தச் சாதனையை டிம் பெய்ன் படைத்தார். 33 இன்னிங்ஸ்களில் டிம் பெய்ன் 150 டிஸ்மிஷல் சாதனையை நிகழ்த்தி, தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக்கின் சாதனையை 34-வது போட்டிகளில் பெய்ன் முறியடித்துள்ளார்.

ஆஸி. முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் 36 இன்னிங்ஸ்களில் 15 டிஸ்மிஷல்களையும், தென் ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் 38 இன்னிங்ஸ்களிலும் இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

45 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்