ஆஸி.க்கு பின்னடைவு: ஒருநாள், டி20 தொடரிலிருந்து வார்னர் நீக்கம்; டெஸ்ட் தொடரிலும் சந்தேகம்: கம்மின்ஸுக்கு ஓய்வு

By பிடிஐ

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கான காயம் குணமடைவதைப் பொறுத்து டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதேபோல வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கும் ஒருநாள், டி20 தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட டேவிட் வார்னர் முதல் ஆட்டத்தில் 69 ரன்களும், 2-வது போட்டியில் 83 ரன்களும் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 5 பேரும் அரை சதம் அடித்தது, ஸ்மித்தின் சதம் ஆகியவற்றால் 2-வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் ஃபீல்டிங் செய்தபோது, அவரின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. எழுந்து நடக்க முடியாத நிலையில் வார்னர் அவதிப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வார்னருக்கு ஏற்பட்ட காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

அதில், வார்னரின் தொடைப்பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டதால், அடுத்த இரு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், 3-வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரிலிருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வார்னர் பங்கேற்பது குறித்து அவரின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என ஆஸி. வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “வார்னருக்கு ஏற்பட்ட காயம் குணமாக சிறிது காலம்ஆகும் என்பதால், ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாட் கம்மின்ஸ் வேலைப்பளு கருதி அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இருவரும் இடம் பெறுவார்களா என்பது ஆலோசிக்கப்படும். இருவரின் உடல்நிலையும், மனநிலையும் மிகவும் அவசியம்” எனத் தெரிவித்தார்.

வார்னருக்குப் பதிலாக டிஆர்கே ஷார் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. பிக் பாஷ் லீக்கில் அதிகமான ரன் சேர்த்த வீரர்களில் முதலிடத்தில் இருப்பதால், ஷார்ட்டுக்கு வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஷ் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஆனால், அணியிலிருந்து நீக்கப்படவில்லை. ஐபிஎல் தொடருக்கு வந்த மிட்ஷெல் மார்ஷ் இன்னும் காயத்திலிருந்து குணமடைந்தாலும் இன்னும் விளையாடாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்