விளையாட்டாய் சில கதைகள்: வீரர்களுக்கு பயிற்சியளிக்க உருவான விளையாட்டு

By பி.எம்.சுதிர்

உலகின் பழமையான விளையாட்டுகளில் ஒன்று ஜிம்னாஸ்டிக். கிறிஸ்து பிறப்பதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, உடலையும், மனதையும் ஒருங்கிணைப்பதற்காக கிரேக்க நாட்டினர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் நாம் காணும் நவீன ஜிம்னாஸ்டிக் போட்டியை உருவாக்கியவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக் மற்றும் பிரட்ரிக் லட்விக் ஜான்.

பண்டைய கால விளையாட்டான ஜிம்னாஸ்டிக்கைப் பற்றி ஆய்வு செய்துவந்த ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக், அதில் மேலும் சில விஷயங்களைச் சேர்த்து 1793-ம் ஆண்டில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். ஜெர்மன் மொழியில் அவர் எழுதிய அந்தப் புத்தகம், பின்னர் “Gymnastics for Youth: or a Practical Guide to Healthful and Amusing Exercises for the use of Schools” என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த புத்தகத்தை பின்பற்றி நவீன ஜிம்னாஸ்டிக் போட்டியை வடிவமைத்தவர் பிரட்ரிக் லட்விக் ஜான். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் தந்தை என்று கருதப்படும் இவர், 1800-களில் புரூஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றிய காலத்தில் புரூஷிய ராணுவம் ஒரு போரில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியில் இருந்து ராணுவ வீரர்களை மீட்கவும், அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியை அளிக்கவும் ஜான் கிறிஸ்டஃப் பிரட்ரிக் எழுதிய புத்தகத்தைப் பின்பற்றி, ராணுவ வீரர்களுக்கு 1811-ம் ஆண்டுமுதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை அளித்தார்.

இது நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு 1881-ம் ஆண்டில், ஜிம்னாஸ்டிக் விளையாட்டு, அமைப்புரீதியான ஒரு விளையாட்டாக உருவெடுத்தது. 1896-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக் போட்டி அறிமுகமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

29 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்