இந்திய பேட்ஸ்மென்கள் சுயநலத்துக்காக சதம் அடிப்பவர்கள், பாக். பேட்ஸ்மென்கள் அப்படியல்ல: இன்சமாம் உல் ஹக் அதிரடி

By பிடிஐ

தான் விளையாடிய காலத்தில் ஆடிய இந்திய பேட்ஸ்மென்கள் சதம் எடுப்பது தங்கள் சுயநலன் கருதியே, அணியின் வெற்றிக்காக அல்ல, ஆனால் பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் சதம் எடுத்தால் அது அணியின் வெற்றிக்காக என்று முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஏதோ பெரிய கண்டுபிடிப்பாக ஆதாரமற்ற தன் சொந்தக் கருத்தை முன் வைத்துள்ளார்.

பொழுது போக வழியில்லாத பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் யூடியூப் சேனலில் இந்தியாவை ஏதாவது ஒருவிதத்தில் குறைகூறுவதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் ரமீஸ் ராஜாவுடன் பேசிய இன்சமாம் உல் ஹக் யூடியூப் சேனலில் கூறும்போது, “நாங்கள் இந்தியாவுடன் விளையாடும் போது காகிதத்தில் இந்திய அணி வலுவான பேட்ஸ்மென்களைக் கொண்டதாக இருக்கும். பாக். பேட்ஸ்மென்கள் 30-40 ரன்கள் எடுத்தாலும் அது அணிக்காக இருக்கும். ஆனால் இந்தியாவில் யார் சதம் எடுத்தாலும் அது அவர்களுக்கானது மட்டுமே.

இது தான் இரு அணிகளுக்குமான வித்தியாசம்.

இம்ரான் கான் உத்தி ரீதியாக பெரிய கேப்டன் இல்லை. ஆனால் வீரர்களை எப்படி வேலை வாங்குவது என்பதில் வல்லவர். இளம் வீரர்களை ஆதரிப்பார், இதுதான் அவரை பெரிய கேப்டனாக்கியது. ஒரு தொடரில் ஒருவர் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவர் அவரை நீக்கமாட்டார். நிறைய வாய்ப்புகள் அளிப்பார் அதுதான் அவரை அனைவரும் மதிக்கத்தக்க மனிதாராக்கியுள்ளது” என்றார் இன்சமாம் உல் ஹக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்