இது 10வது முறை ;21 இன்னிங்ஸ்களாக சதம் இல்லை: தொடரும் கோலியின் பேட்டிங் சோகம்

By ஐஏஎன்எஸ்

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சோகம் தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து 20 இன்னிங்ஸ்களாக மூன்றுவகையான போட்டிகளிலும் சதம் அடிக்காமல் ரன்மெஷினின் பேட்டிங் பொலிவிழந்து காணப்படுகிறது.

இந்திய அணியின் முக்கியத் தூண் அசைக்க முடியாத பேட்ஸ்மேன், ரன் மெஷின் கேப்டன் விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை. பல போட்டிகளில் நிலைத்து ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளார்.

களத்தில் இறங்கினாலே அரை சதம் அல்லது சதம் அடிக்காமல் மீண்டும் பெவிலியன் திரும்பாமல் இருக்க மாட்டார். எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் கிங் கோலி என்ற அச்சம் எதிரணிக்கு இருந்தது. ஆனால், நியூஸிலாந்து தொடருக்கு வந்ததில் இருந்து கோலியின் பேட்டிங்கில் ஒரு மந்தமான போக்கு காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

நியூஸிலாந்து தொடரில் 4 டி20 போட்டிகளில் 125 ரன்களும், 3 ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்து மொத்தம் 200 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டிலும் 2,19 ரன்கள் என சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை, கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்டிலும் கோலி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.

மூன்றுவகையான கிரிக்கெட்டிலும் கடந்த 21 இன்னிங்ஸ்களாக விராட் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது.20 இன்னிங்ஸ்களாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் வீக்பாயின்ட் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு நியூஸிலாந்து வீரர்கள் விரிக்கும் வலையில் எளிதாக கோலி விழுந்து விடுகிறார். கடந்த முதலாவது டெஸ்டிலும் சவுதி பந்துவீச்சில்தான் கோலி ஆட்டமிழந்தார், இந்த டெஸ்டிலும் சவுதி பந்துவீச்சுக்குத்தான் கோலி இரையாகினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியை 10-வது முறையாகச் சவுதி ஆட்டமிழக்கச் செய்துள்ளார். கோலியை அதிகமான முறை ஆட்டமிழக்கச்செய்த வெளிநாட்டு வீரர் எனும் பெருமையையும் சவுதி படைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்