ஆஸ்திரேலிய ஓபன்: கால் இறுதியில் நடால், ஹாலப்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலப்பும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 23-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 3-6, 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.

7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலெவைவும், 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 10-ம் நிலை வீரரான பிரான்சின் கெல் மோன்பில்ஸையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில்நுழைந்தனர்.

4-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-2, 2-6, 4-6, 7-6 (7-2), 6-2என்ற செட் கணக்கில் 3 மணி நேரம்25 நிமிடங்கள் போராடி 15-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடம் வீழ்ந்து கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 16-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸையும், 28-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவிட் 6-7 (4-7), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் போலந்தின் இகா ஸ்வெய்டெக்கையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

17-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7-6 (7-5), 6-7 (4-7), 2-6 என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 32-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 9-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 mins ago

ஜோதிடம்

34 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்