உங்களைத் தெரியாதா? 'ஸ்கிப்பிங்’கில் நீங்கள் ’தாதா’வாயிற்றே: கங்குலியிடம் சச்சின் கலகல

By ஐஏஎன்எஸ்

கங்குலி தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் உடற்பயிற்சி படம் ஒன்றை வெளியிட, சச்சின் டெண்டுல்கர் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிசிசிஐ தலைவர் கங்குலியின் காலை வாரிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சிக்குப் பிறகு தான் அமரிந்திருக்கும் நிலையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த கங்குலி, “குளிர்ந்த காலை ஒன்றில் நல்ல உடற்பயிற்சி அமர்வு புத்துணர்வூட்டுகிறது” என்ற வாசகத்தை எழுதியிருந்தார்.

இதற்கு சச்சின் டெண்டுல்கர் ‘வெல்டன் தாதா! க்யா பாத் ஹை!’ என்று பின்னூட்டம் போட, கங்குலி பதிலளிக்கும் போது, ‘நன்றி சாம்பியன், எப்போதுமே உடற்தகுதி மீது பெரிய தீவிரம் காட்டுவேன், பெரிய பயிற்சி நாட்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்க

அங்குதான் சச்சின் டெண்டுல்கர் ஜாலியாகக் கங்குலியைக் கலாய்த்து காலை வாரினார், “ஆம் தாதா, பயிற்சியை நீங்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள் என்று நாங்கள் அனைவரும் அறிவோம்! குறிப்பாக ‘ஸ்கிப்பிங்’ என்று பின்னூட்டமிட்டுள்ளார்.

ஸ்கிப்பிங் என்றால் ஸ்கிப்பிங் பயிற்சியும் பயிற்சியையே ‘ஸ்கிப்’ செய்வதும் என்ற சிலேடையைப் பயன்படுத்தியுள்ளார் சச்சின்.

கங்குலியும் டெண்டுல்கரும் 6,609 ரன்களை ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர்களாக 136 இன்னிங்ஸ்களில் 49.32 என்ற சராசரியில் எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்