இன்னும் ஒரு ரன்தான்; டி20யில் 'ரன் கிங்' கோலி: ரோஹித்தை முந்துகிறார்

By செய்திப்பிரிவு

டி20 போட்டிகளில் யார் அதிகமான ரன் சேர்த்த வீரர்களுக்கான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோஹித் சர்மாவும் நீயா, நானா என்று கடும் போட்டியில் இருந்துவந்த நிலையில், ரோஹித்தைத் தோற்கடித்து கோலி முதலிடத்துக்கு முன்னேற உள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால், அவரை முந்தி விராட் கோலியைப் பிடிக்க முடியாத இடத்துக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 போட்டிகளில் ரன் சேர்த்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் தற்போது விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 ரன்களில் சமநிலையில் இருக்கின்றனர். இலங்கை அணிக்கு எதிரான டி20தொடரில் கோலி விளாசலில் ஈடுபட்டு ரன்களை வாரிக் குவித்தால், ரோஹித் சர்மாவால் பிடிக்க முடியாத இடத்துக்கு கோலி சென்றுவிடுவார்.

விராட் கோலி தற்போது 75 டி20 போட்டிகளில் 2,633 ரன்களுடன் 52.66 சராசரி வைத்துள்ளார். ரோஹித் சர்மா 104 டி20 போட்டிகளில் விளையாடி 2,633 ரன்கள் சேர்த்துள்ளார்.

ரோஹித் சர்மாவைக் காட்டிலும் பின்தங்கி இருந்த விராட் கோலி, மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 29 பந்துகளுக்கு 79 ரன்கள் சேர்த்தது, 94 ரன்கள் சேர்த்தது ஆகியவற்றால் ரோஹித் சர்மாவுக்கு இணையாகக் கோலி உயர்ந்துவிட்டார்.

ரோஹித் சர்மாவின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தொடருக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தத் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படாமல் இருந்திருந்தால், ரன் வேட்டையில் ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் இடையே பெரும் போட்டி வந்திருக்கும்.

இதுமட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிகமான ரன் சேர்த்த பேட்ஸ்மேன்களுக்கான போட்டியிலும் ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் இடையே போட்டி நீடித்து வருகிறது.

இலங்கை அணிக்கு எதிராக இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 289 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால் ,விராட் கோலி, 4 போட்டிகளில் விளையாடி 283 ரன்களுடன் உள்ளார். ரோஹித் சர்மாவை முறியடிக்க 7 ரன்கள்தான் கோலிக்கு தேவை.

ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் அடுத்தபடி, நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 83 போட்டிகளில் விளையாடி 2,436 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

53 secs ago

இந்தியா

23 mins ago

விளையாட்டு

15 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

48 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

மேலும்