இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தெ.ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் விலகல்

By பிடிஐ

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் காயம் காரணமாக விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சென்சூரியனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்கஆட்டக்காரர் எய்ட்ன் மார்க்ரமுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, காயத்தின் தன்மை குறித்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

அதில் மார்க்கிரமின் இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இந்த காயம் குணமடைவதற்கு ஏறக்குறைய 6 வாரங்கள் வரை மார்க்ரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதிலும் இருந்து மார்க்கரம் நீக்கப்படுகிறார் என்றும் அவருக்கு பதிலாக கேப் கோப்ராஸ் அணியில் விளையாடி வரும் பீட்டர் மலான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தென் ஆப்பிரிக்க வாரியம் தெரிவித்துள்ளது.


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது மார்க்கிரமுக்கு இதே போன்று காயம் ஏற்பட்டது. அக்டோபர் மாதம் புனேயில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது சரியாக பேட்டிங் செய்யவில்லை என்று மார்க்ரம் தனது கையை சுவற்றில் குத்திக் கொண்டதால், அவரின் விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்