ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 2019-ம் ஆண்டில் கோலியைத் தொடமுடியாத ஸ்மித்; ரஹானே சரிவு

By பிடிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

2019-ம் ஆண்டின் முடிவில் விராட் கோலி 928 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கோலிக்கு கடும் போட்டியளித்து வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 17 புள்ளிகள் குறைவாக கோலியைப் பிடிக்க முடியாமல் ஆண்டு முடிவில் 2-வது இடத்திலேயே உள்ளார்.

நியூஸிலாந்து கேப்டன் கானே வில்லியம்ஸன் 864 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இந்திய அணி வீரர் சத்தேஸ்வர் புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளார். 786 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் லாபுசாங்கே 5-வது இடத்தில் உள்ளார். இந்த 5 இடங்களும் எந்தவிதமான மாற்றமில்லாமல் இருக்கின்றன.

கராச்சியில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததையடுத்து பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 3 இடங்கள் முன்னேறி, 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

ரஹானேவைத் தொடர்ந்து 8-வது இடத்தில் ஆஸி. வீரர் டேவிட் வார்னரும், 9-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், 10-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லரும் உள்ளனர். முதல் 20 இடங்களில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் 12-வது இடத்திலும், ரோஹித் சர்மா 15-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் பும்ரா 6-வது இடத்தில் உள்ளார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தற்போது நடந்துவரும் நிலையில், இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி 216 புள்ளிகளுடனும் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை அணி தலா 80 புள்ளிகளுடன் உள்ளன. நியூஸிலாந்து 60 புள்ளிகளுடனும், இங்கிலாந்து அணி 56 புள்ளிகளுடனும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்