8 மாதங்கள் தொடர்ச்சியாக பயணம் , சூட்கேசுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்: கிளென் மேக்ஸ்வெல் பேட்டி

By செய்திப்பிரிவு

4-5 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக ஓய்வற்ற கிரிக்கெட் பயணம், அதுவும் கடைசி 8 மாதங்கள் சூட்கேசும் கையுமாக அதனுடேயே வாழ்க்கை நடத்த வேண்டியதானது இதனால் உடலும் மனமும் சீரழிந்து விட்டது என்று ஓய்வில் இருக்கும் ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டரி கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

“கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவது என்ற முடிவுக்கு நான் வந்ததற்கு மிகப்பெரிய காரணம் மன, உடல் ரீதியாக மிகவும் சீரழிந்து போயிருந்தேன். அதுவும் 8 மாதங்கள் தொடர் பயணங்கள் என்னை நொறுக்கி விட்டது சூட்கேசுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். இதே நிலை கடந்த 4-5 ஆண்டுகளாகவே சென்று கொண்டிருந்தது.

தொடர்ச்சியாக வீடே இல்லை ரோடுதான் பயணம்தான். என்னால் தாங்க முடியவில்லை, அதனால்தான் இடைவேளை தேவை என்று முடிவு கட்டினேன், எனது முடிவை அங்கீகரித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் விக்டோரியா ஆகியோருக்கு நன்றி.

என்னுடைய பெண் தோழி வினிதான் இதனை கண்டுபிடித்தார், அதனால் அவருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் கூறிய அறிவுரையை வைத்துத்தான் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன்னணி நிர்வாகிகளிடம் பேசினேன், தோள்களிலிருந்து பாரம் இறங்கியது போல் இருந்தது.

இப்போது வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறேன், நண்பர்கள், குடும்பம் என்று பொழுதைக் கழித்து வருகிறேன், இந்த ஆண்டு நிறைய கிரிக்கெட் ஆட வேண்டும் என்று நினைத்திருந்தேன், இது தற்போது அடுத்த ஆண்டுதான் முடியும் என்று தெரிகிறது” என்றார் கிளென் மேக்ஸ்வெல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

9 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்