உலக தடகள சாம்பியன்ஷிப்: உசேன் போல்டுக்கு ஹாட்ரிக் தங்கம் - 4x100 மீ. தொடர் ஓட்டங்களில் ஜமைக்க அணிகள் முதலிடம்

By ஏஎஃப்பி

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 4x100 மீ. தொடர் ஓட்டங்களில் ஜமைக்க ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. உலகின் அதிவேக மனிதரான உசேன் போல்ட் 3-வது தங்கப் பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

15-வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி சீன தலைநகர் பெய் ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் நெஸ்டா கார்டர், ஆசாபா பாவெல், நிகெல் ஆஷ்மீட், உசேன் போல்ட் ஆகியோர் அடங்கிய ஜமைக்க அணி 37.36 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியன் ஆனது.

இதில் கடைசி 100 மீ. தூரத்தை போல்ட் ஓடினார். அப்போது மைதானமே அதிர்ந்தது. இந்த உலக சாம்பியன்ஷிப்பில் 3-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் போல்ட். 2011 முதல் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று வரும் போல்ட் ஒட்டுமொத்தமாக 11 தங்கம் வென்றுள்ளார்.

டிரவோன் புரோமெல், ஜஸ்டின் கேட்லின், டைசன் கேய், மைக் ரோட்ஜர்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 2-வது இடத்தைப் பிடித்தபோதும், பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஏமாற்றத்தோடு வெளியேறியது. இதனால் வெள்ளிப் பதக்கம் சீனாவுக்கும் (38.01), வெண்கலப் பதக்கம் கனடாவுக்கும் (38.13) கிடைத்தன.

மகளிர் 4x100 மீ. தொடர் ஓட்டம்

மகளிர் 4x100 மீ. தொடர் ஓட்டத்திலும் ஜமைக்கா அணியே தங்கம் வென்றது. வெரோனிகா, நடாஷா மோரிசன், இலானே தாம்ப்சன், ஷெல்லி அன் பிரேசர் ஆகியோர் அடுத்தடுத்து ஓடி 41.07 விநாடிகளில் இலக்கை எட்டினர். இந்தப் பிரிவில் அமெரிக் காவுக்கு (41.68) வெள்ளியும், டிரினிடாட் அன்ட் டொபாக்கோ வுக்கு (42.03) வெண்கலமும் கிடைத்தன.

800 மீ. ஓட்டம்

மகளிர் 800 மீ. ஓட்டத்தில் பெலா ரஸின் மரினா அர்ஸம்சோவா, நடப்பு சாம்பியனான கென்யாவின் யூனிஸ் சம்முக்கு அதிர்ச்சி தோல்வி யளித்தார். 200 மீ. தொலைவில் சென்றபோது யூனிஸை பின்னுக் குத்தள்ளிய மரினா 1 நிமிடம், 58.03 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

கனடாவின் மெலிஸா பிஷப் 1 நிமிடம், 58.12 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2013 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதிலிருந்து 800 மீ. ஓட்டத்தில் தொடர் ஆதிக்கம் செலுத்தி வந்த யூனிஸ் 1 நிமிடம், 58.18 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார்.

மோ பாராவுக்கு 7-வது தங்கம்

ஆடவர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் மோ பாரா 13 நிமிடம், 50.38 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். கென்யாவின் காலேப் நிகு (13:51.75) வெள்ளியும், எத்தியோப்பியாவின் ஹேகோஸ் கெப்ரிவெட் (13:51.86) வெண்கலமும் வென்றனர்.

32 வயதான மோ பாரா, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் 5000 மீ. ஓட்டம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் தொடர்ச்சியாக 7-வது பதக்கத்தை வென்றுள்ளார்.

மகளிர் உயரம் தாண்டுதல்

மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் ரஷ்யாவின் மரியா குசினா 2.01 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றதோடு, தனது ‘பெர்சனல் பெஸ்ட்’ நேரத்தையும் பதிவு செய்தார். குரேஷியாவின் பிளாங்கா விளாசிச், ரஷ்யாவின் அன்னா சிசெரோவா ஆகியோரும் 2.01 மீ. தூரம் தாண்டினர். எனினும் முந்தைய போட்டிகளின் இறுதிச்சுற்றில் தோற்றதன் அடிப் படையில் அவர்கள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

50 கி.மீ. நடைப் போட்டி

ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டி யில் ஸ்லோவாகியாவின் மேட் டோத் 3 மணி, 32 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென் றார். இதன்மூலம் உலக சாம்பியன் ஷிப்பில் முதல் தங்கத்தை வென்றது ஸ்லோவாகியா. ஆஸ்திரேலியாவின் ஜார்ட் டாலென்ட் (3:42.17) வெள்ளியும், ஜப்பானின் டகாயூகி டானி (3:42:55) வெண்கலமும் வென்றனர்.

கவுடா ஏமாற்றம்

ஆடவர் வட்டு எறிதலில் போலந்தின் பியாட் மாலாசவுஸ்கி (67.40) தங்கமும், பெல்ஜியத்தின் பிலிப் மிலானோவ் (66.90) வெள்ளியும், போலந்தின் ராபர்ட் அர்பனேக் (65.18) வெண்கலமும் வென்றனர். இந்திய வீரர் விகாஸ் கவுடா 62.24 மீ. தூரம் எறிந்து 9-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றினார்.

உலக சாதனை

ஆடவர் டெக்கத்லான் போட்டி யில் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் ஆஷ்டன் ஈட்டன் 9,045 புள்ளிகளுடன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். முந்தைய சாதனையும் ஆஷ்டனிடமே இருந் தது. இதுதவிர தங்கப் பதக்கத்தை யும் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்