கிரிக்கெட் ஊழல்: முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

By செய்திப்பிரிவு

2 ஒருநாள், ஒரேயொரு டி20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடிய முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் குலாம் போடி என்பவருக்கு கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டில் அப்போதைய தெ.ஆ. கேப்டன் ஹான்சி குரோனியே பெரிய கிரிக்கெட் ஊழலில் சிக்கியதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் 2004-ல் இதற்காகவென்றே சட்டம் இயற்றப்பட்டது, இந்தச் சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் குலாம் போடி.

உள்நாட்டு ராம்ஸ்லாம் டி20 போட்டித் தொடரில் குலாம் போடி ஆட்ட நிர்ணய, சூதாட்டப் புகாரில் சிக்கி 20 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் குலாம் போடி போலீஸில் தானே சரணடைந்தார். இவருக்கு தற்போது தீர்ப்பு வந்ததையடுத்து ஜனவரியில் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூதாட்டப் புகாரில் சிக்கிய மற்ற 6 வீரர்களான எதி மபலாட்டி, அல்விரோ பீட்டர்சன், தமி சோலகிலி, ஜான் சைம்ஸ், சொட்சோபே, பூமி மட்ஷிக்வே ஆகியோருக்கு 2 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அல்விரோ பீட்டர்சன் தடைக்காலம் முடிந்து வர்ணனைக்குத் திரும்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

13 mins ago

சுற்றுச்சூழல்

23 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

18 mins ago

விளையாட்டு

39 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்