துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை: பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்: மனு,சவுரவ் தங்கம் வென்றனர்

By செய்திப்பிரிவு

ரியோ டி ஜெனிரோ,


பிரேசில் நகரின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.

பிரேசில் நகரின் ரியோ டி ஜெனிரோவில் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பைப் போட்டி நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், சவுரவ் தேஸ்வல் தங்கப் பதக்கம் வென்றனர். அபிஷேக் வர்மா வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்த ஆண்டு நடந்த 4 உலகக்கோப்பைப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளிலும் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. போட்டியின் முடிவில் இந்தியா 5 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளி, 2 வெண்கலத்துடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

போட்டியில் பங்கேற்ற எந்த அணியும் ஒரு தங்கப்பதக்கத்துக்கு அதிகமாக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10மீ ஏர் ரைபில் பிரிவில் உலகின் நம்பர் ஒர் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா, தீபக் குமாருடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்து தேசத்துக்கு 4-வது தங்கப்பதக்கத்தை வென்றுகொடுத்தார்.

அதேபோல, 10மீ. ரைபிள்பிரிவில் மனு பகேர், சவுரவ் சவுத்ரி மற்றும் யாஷ்அஸ்வினி சிங் தேஸ்வால்,அபிஷேக் வர்மா ஜோடிக்கு இடையே கடும் போட்டி இறுதிச்சுற்றில் இருந்துத. இதில் 17-15 என்ற கணக்கில் மனு பகேர், சவுரவ் சவுத்ரி ஜோடி தங்கம் வென்றது. வெள்ளிப்பதக்கத்தையும் மற்றொரு இந்திய ஜோடியான யாஷ்அஸ்வினி, அபிஷேக் ஜோடி வென்றனர்.
வெண்கலப் பதக்கத்தை சீனாவின் பாங் வீ, ஜியா ரியாக்ஸின் ஜோடி கைப்பற்றினர்.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 secs ago

உலகம்

9 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

49 mins ago

கல்வி

44 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

59 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

மேலும்