ஒலிம்பிக் டெஸ்ட் நிகழ்வு ஹாக்கி ஜப்பானை பந்தாடியது இந்திய அணி:  6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி

By செய்திப்பிரிவு

டோக்கியோ

ஒலிம்பிக் டெஸ்ட் நிகழ்வு ஹாக்கி தொடரில் ஜப்பானை 6-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில் தனது 3-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 6-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் மன்தீப்சிங் ஹாட்ரிக் கோல் (9, 29 மற்றும் 30-வது நிமிடம்) அடித்து அசத்தினார்.

நிலம் சஞ்ஜீப் செஸ் (7-வது நிமிடம்), நீலகண்ட சர்மா (3-வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (41-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜப்பான் அணி சார்பில் கென்டாரோ ஃபுகுடா (25-வது நிமிடம்), கென்டா தனகா (36-வது நிமிடம்), கஸூமா முராட்டா (52-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றிருந்தது. இரு வெற்றிகள் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித் துள்ள இந்திய அணி, முதலிடம் வகிக்கும் நியூஸிலாந்துடன் இறுதிப் போட்டியில் இன்று மோதுகிறது.

மகளிர் பிரிவில் டிரா

ஒலிம்பிக் டெஸ்ட் நிகழ்வு ஹாக்கி தொடரில் மகளிர் பிரிவிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய மகளிர் அணியினர் நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தை சீனாவுக்கு எதிராக கோல்களின்றி டிராவில் முடித்தது. 3 ஆட்டங்களில் 5 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள இந்திய மகளிர் அணியினர் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜப்பானை சந்திக்கிறது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்