கேல் ரத்னா விருதுக்கு ஹர்பஜன் பெயர் தாமதமாக பரிந்துரைக்கப் பட்டது ஏன்? - பஞ்சாப் அரசு விசாரணைக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

கேல் ரத்னா விருதுக்குத் தேவையான ஆவணங்களை ஹர்பஜன் சிங் குறித்த காலத்துக்கு முன்னரே சமர்ப்பித்து விட்ட நிலையிலும் பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை தாமதமாக மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பியதால்  ஹர்பஜன் பெயர் கேல் ரத்னா விருதுக்கு நிராகரிக்கப்பட்டது. 

தாமதமாக வந்ததால் அவர் பெயர் நீக்கப்பட்டதாக மத்திய இளையோர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சகம் நிராகரித்ததாகத் தெரிவித்ததால் பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதியிடம் ஹர்பஜன் இது தொடர்பாக முறையிட்டதையடுத்து அவர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விளையாட்டு இயக்குநர் தாமதத்திற்கான காரணத்தை விசாரணை செய்யவுள்ளார். 

ஹர்பஜன் சிங் மார்ச் 20ம் தேதியே கேல் ரத்னா விருது பரிந்துரைகளுக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்ததாகத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

35 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்