இந்தோனேசியா குத்துச்சண்டை: மேரி கோமுக்கு தங்கப் பதக்கம்

By செய்திப்பிரிவு

 

புதுடெல்லி, 

இந்தோனேசியாவில் நடந்த 23-வது பிரெசிடென்ட்ஸ் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் லாபுவான் பாஜோ நகரில் 23-வது பிரெசிடென்ட்ஸ் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி நடந்து வந்தது. இதில் மகளிருக்கான 51-வது எடைப் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலை எதிர்த்து மோதினார் இந்திய வீரங்கனை மேரி கோம். 

6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம் முன், ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங்க் ஏப்ரலின் முயற்சி பலிக்கவில்லை. 

ஒவ்வொரு சுற்றிரும் மேரி கோமின் சூப்பர் பஞ்ச்களுக்கும்,குத்துகளுக்கும் தாங்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனை சுருண்டார். முடிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் எளிதாக வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

கடந்த மே மாதம் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார், ஆனால், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மேரிகோம் பங்கேற்கவில்லை. 

மாதம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 
அடுத்ததாக செப்டம்பர் 7-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியல் தங்கம் வெல்லும் நோக்கில் மேரி கோம் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த போட்டியில் தங்கம் வென்றது மேரி கோமுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும். இந்த போட்டியில் பட்டம் வென்றால், 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெறுவார்.


பிடிஐ

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 secs ago

இந்தியா

6 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

41 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்