மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து தோனி விலகல்; ராணுவத்தில் 2 மாதம் பணியாற்ற திட்டம்: பிசிசிஐ

By செய்திப்பிரிவு

தோனி அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மே.இ.தீவுகளில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கலந்துகொள்கிறது. இதற்கான அணி வரும் ஞாயிறு அன்று தேர்வு செய்யப்படுகிறது. இதனையடுத்து தோனி அணியில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னாள் வீரர்கள் சேவாக், கம்பீர் ஆகியோரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி  மேற்கிந்தியத் தொடரிலிருந்து தானாக விலகி இருக்கிறார் என்றும், அடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் தனது நேரத்தைச் செலவிட இருக்கிறார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதனை பிசிசிஐ அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். 

தோனி இடம்பெறாத பட்சத்தில் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ராணுவத்தில் அதிகம் பற்று கொண்டவர். இவர் இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்