இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது.

மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழை பெய்யும் என்பதால் அந்த நேரத்தில் ஒருபோதும் டெஸ்ட் தொடர் நடைபெறாது. ஆனால் இந்த முறை இந்தியாவுடனான தொடருக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி, ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்தியா-வங்கதேசம்: போட்டி அட்டவணை

ஜூன் 8, 9: பயிற்சி போட்டி

ஜூன் 10-14: முதல் டெஸ்ட், ஃபாதுல்லா

ஜூன் 18: முதல் ஒருநாள் போட்டி, டாக்கா (பகல்/இரவு)

ஜூன் 21: 2-வது ஒருநாள் போட்டி, டாக்கா (பகல்/இரவு)

ஜூன் 24: 3-வது ஒருநாள் போட்டி, டாக்கா (பகல்/இரவு)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்