மழையால் கைவிடப்பட்ட ஆட்டத்தில் நியூசி.யை அச்சுறுத்திய ஜிம்பாப்வே

By செய்திப்பிரிவு

நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்படுவதற்கு முன்பு நியூசிலாந்தை அச்சுறுத்தியது ஜிம்பாப்வே.

லிங்கனில் நடைபெற்ற இந்த பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அந்த அணி ஜிம்பாப்வேயின் எதிர்பாராத நல்ல பந்துவீச்சுக்கு 30.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தடுமாறியது. அதன் பிறகு மழை வந்ததால் ஆட்டம் சிறிது நேரத்த்திற்குப் பிறகு கைவிடப்பட்டது. மார்டின் கப்தில் 86 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.

தினஷே பன்யங்கரா என்ற ஜிம்பாவே வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவரில் மெக்கல்லமினால் 2 பவுண்டரி விளாசப்பட்டாலும், பிறகு அவரை தன்னிடமே கேட்ச் கொடுக்கச் செய்து வெளியேற்றினார்.

பிறகு 5-வது ஓவரில் ஃபார்மில் இருக்கும் கேன் வில்லியம்சன் (6) விக்கெட்டையும் பன்யங்கரா வீழ்த்தினார். மறுமுனையில் நன்றாக ஆடிய கப்தில், சிக்சருடன் 34 பந்துகளில் அரைசதம் எட்டினார். ராஸ் டெய்லர் 11 ரன்களில் கேப்டன் எல்டன் சிகும்பரா பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

அதன் பிறகு அபாய அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன் (6) விக்கெட்டையும் சிகும்பரா வீழ்த்தினார், மிட் ஆஃபில் அவருக்கு தஃபாத்ஸ்வா கமுங்கோஸி அருமையான கேட்சைப் பிடித்தார்.

மார்டின் கப்தில் 85 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். 86-வது பந்தில் சிகந்தர் ரஸாவிடம் அவுட் ஆனார். 157/7 என்ற நிலையில் மழை வர அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ஆட்டம் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்