அகில இந்திய கைப்பந்து போட்டி கேரளா, கர்நாடகா அணிகள் வெற்றி

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அகில இந்திய அளவிலான கைப்பந்துப் போட்டி மின்னொளியில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 4-வது நாள் லீக் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா - இந்திய ராணுவ அணிகள் மோதின. இதில் கேரளா அணி 25-24, 25-22, 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் கர்நாடகா அணி 25-22, 19-25, 25-22, 25-23 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. மகளிர் பிரிவில் ரயில்வே - கர்நாடகா அணிகள் மோதின. இதில் ரயில்வே அணி 25-16, 25-16, 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

ஐந்தாம் நாளான நேற்று (2-ம் தேதி) மாலை ஆண்கள் பிரிவில் இந்தியன் யுனிவர்சிட்டி - கர்நாடகா, பஞ்சாப் - இந்திய ராணுவ அணியும், மகளிர் பிரிவில் கேரளா - மேற்கு வங்க அணியும் மோதின.

ஆறாவது நாளான இன்று (3-ம் தேதி) மாலை ஆண்கள் பிரிவில் இந்தியன் ரயில்வே - கேரளா அணியும், தமிழ்நாடு - ராஜஸ்தான் அணியும், மகளிர் பிரிவில் தமிழ்நாடு - மேற்கு வங்க அணியும் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

23 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

21 mins ago

சினிமா

39 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

33 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

47 mins ago

வலைஞர் பக்கம்

51 mins ago

சினிமா

56 mins ago

மேலும்