1,000 போட்டிகளில் வென்று ரோஜர் பெடரர் சாதனை

By செய்திப்பிரிவு

டென்னிஸ் விளையாட்டில் ஆயிரம் போட்டிகளில் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.

உலக ஒற்றையர் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பெடரர், நேற்று நடைபெற்ற பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் பெறும் 1,000வது வெற்றி இதுவாகும்.

ரயோனிக்கை அவர், 6-4, 6-7(2), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் 1,000 போட்டிகளில் வெற்றி பெறும் மூன்றாவது நபர் பெடரர் ஆவார்.

முன்னதாக, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1253), இவான் லெண்டில் (1071) ஆகியோர் 1,000 போட்டிகளில் வென்றுள்ளனர். பெடரர் இதுவரை 1,000 போட்டிகளில் வெற்றியும், 227 தோல்வியும் அடைந்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் 0.815 ஆகும். ஜிம்மி கானர்ஸ் 278 போட்டிகளிலும், லெண்டில் 239 போட்டிகளில் தோல்வி யடைந்துள்ளனர். அவர்கள் இருவரின் வெற்றி சதவீதம் 0.815 ஆகும்.

ஏடிபி உலக டூர் மாஸ்டர் போட்டிகளில் 311 முறையும், ஏடிபி உலக டூர் போட்டிகளில் 299 முறையும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 279 முறையும், டேவிஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் 63 முறையும், பார்கிளேஸ் ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டிகளில் 48 முறையும் பெடரர் வெற்றிபெற்றுள்ளார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

50 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்