2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்

By பிடிஐ

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதுவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சச்சின் டெண்டுல்கரை 2015 உலகக்கோப்பையின் தூதுவராக நியமித்துள்ளது. ஏற்கெனவே 2011 உலகக்கோப்பையில் தூதுவராக இருந்த சச்சின், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்” என கூறப்பட் டுள்ளது.

2015 உலகக்கோப்பை ஆஸ்தி ரேலியா மற்றும் நியூஸிலாந்தில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. உலகக் கோப்பையை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஐசிசி மேற்கொள்ளும் பல்வேறு பணிகளை சச்சின் விளம்பரப்படுத்துவார்.

உலகக்கோப்பை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் இதுபற்றி கூறும்போது, “தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையின் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். கடந்த ஆறு உலகக்கோப்பைப் போட்டி களில் பங்கேற்ற பிறகு முதல்முறை யாக ஆடுகளத்துக்கு வெளியே இருந்து போட்டியை ரசிக்கவுள்ளேன். இதை, நான் உதவியாளராக (பால்பாய்) இருந்த 1987 உலகக் கோப்பையுடன் ஒப்பிடுகிறேன்.

உலகக்கோப்பை மீதான பரபரப்பு ஒவ்வொருமுறையும் அதிகமாகிறது. இந்தமுறை போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் அவர்களுடைய விளையாட்டுக் கலாசாரம், அபாரமான கிரிக்கெட் வசதிகள், அறிவுபூர்வமான ரசிகர்கள் போன்றவற்றுக்காக பெயர் பெற்றவர்கள். உலகக்கோப்பையை வெல்வது ஒவ்வொரு கிரிக்கெட் வீரனின் கனவு என்பதால் இந்தப் போட்டி ஒவ்வொரு வீரர் மற்றும் அணியின் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது.

உலகக்கோப்பையுடன் காட்சி தரும் சாம்பியன் அணி, பல இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்து கனவையும் விதைக்கிறது. அப்படி ஏற்பட்ட கனவை 22 வருடங்களுக்குப் பிறகு 2011-ல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதன் மூலம் நனவாக்கினேன்” என்றார்.

11-வது உலகக்கோப்பை பிப்ரவரி 14 அன்று தொடங்குகிறது. முதல்நாளில், கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் போட்டியில் நியூஸிலாந்தும் இலங்கையும் மோதுகின்றன. அதேநாளில் மெல்போர் னில் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் சந்திக்கின்றன.

இந்த உலகக்கோப்பையில் 14 மைதானங்களில் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. ஆஸ்திரேலியாவும் (மெல்போர்ன், அடிலெய்டு, பிரிஸ்பேன், கான்பரா, ஹோபர்ட், பெர்த், சிட்னி) நியூஸிலாந்தும் (கிறைஸ்ட்சர்ச், ஆக்லாந்து, டுனேடின், ஹாமில்டன், நேப்பியர், நெல்சன், வெலிங்டன்) தலா 7 மைதானங்களில் போட்டியை நடத்துகின்றன.

2011 உலகக்கோப்பையின் வடிவ மைப்பு இந்த உலகக்கோப்பையிலும் பின்பற்றப்படுகிறது. ஏழு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு கூடுதல் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐசிசியில் முழு உறுப்பினர்களாக உள்ள 10 அணிகளைத் தவிர ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளும் போட்டியில் கலந்து கொள்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

21 mins ago

சினிமா

26 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்