உலக தடகள சாம்பியன்ஷிப் 400 மீட்டர் ஓட்டத்தில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார் நிகெர்க்: ஈட்டி எறிதலில் பார்போராவுக்கு தங்கம்

By செய்திப்பிரிவு

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் வான் நிகெர்க் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். மகளிருக்கான ஈட்டி எறிதலில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா தங்கம் வென்றார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் வான் நிகெர்க் பந்தய தூரத்தை 43.98 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பஹாமஸ் வீரர் ஸ்டீவன் கார்டினர் பந்தய தூரத்தை 44.41 விநாடிகளிலும், கத்தாரின் அப்தலேலா ஹருன் 44.48 விநாடிகளிலும் இலக்கை அடைந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

800 மீட்டர் ஓட்டம்

ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் 25 வயதான பிரான்சின் அம்புரோஸ் போஸ் தங்கப் பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர், 1:44.67 விநாடிகளில் கடந்தார். அம்புரோஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போலந்தின் ஆடம் ஸ்கோட் பந்தய தூரத்தை 1:44.95 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், கென்யாவின் கிபிகோன் பெட் பந்தய தூரத்தை 1:45.21விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஸ்டீபில்சேஸ்

ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் கென்யாவின் கிப்ருடோ பந்தய தூரத்தை 8 நிமிடங்கள் 14.12 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மோராக்கோவின் சோபைன் எல்ப்காலி பந்தய தூரத்தை 8:14.49 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் இவான் ஜாகர் பந்தய தூரத்தை 8:15.53 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

ஆடவருக்கான போல் வால்ட் பிரிவில் அமெரிக்காவின் சேம் ஹென்ட்ரிக்ஸ் 5.95 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். போலந்தின் பியோட்டர் லிசெக் 5.89 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிரான்சின் ரெனாட் லாவில்னே 5.89 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஈட்டி எறிதல்

மகளிருக்கான ஈட்டி எறிதலில் செக் குடியரசின் பார்போரா ஸ்பாட்கோவா 66.76 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் லிங்வெய் லி 66.25 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கமும் சீனாவுக்கே கிடைத்தது. அந்நாட்டின் ஹூய் லியு 65.26 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். - ஏஎப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

வாழ்வியல்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்