சென்னை சூப்பர் கிங்ஸ்தான் என் ஹோம் டீம்: தினேஷ் கார்த்திக்

By இரா.முத்துக்குமார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் தன் ஹோம் டீம் என்றும் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு விளையாட முடிந்தால் மகிழ்ச்சியடைவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் ஆல்பர்ட் டுட்டி பேட்ரியட்ஸ் அணிக்கு ஆடும் தினேஷ் கார்த்திக், டிஎன்பிஎல் இணையத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் எப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி பேசினாலும் என் முகத்தில் புன்னகை தவழும். அதுதான் என் ஹோம் டீம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவதை பெரிதும் நேசிக்கிறேன். ஆனால் அணிச்சேர்க்கையைப் பொறுத்துதான் அனைத்தும்.

அனைத்துப் பயிற்சியாளர்களும் ஏலத்துக்குத் தயாராகி வருகின்றனர் என்றே நான் உறுதியாகக் கூற முடியும்.

ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் நுழைய முடிந்தால் அதைவிட வேறு ஒன்றும் எனக்குப் பெரிதல்ல.

ஏலத்துக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு கூறினார் தினேஷ் கார்த்திக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்