பாரா ஒலிம்பிக் இன்று தொடக்கம்

By பிடிஐ

பாரா ஒலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாரா ஒலிம்பிக்கில் 162 நாடுகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பாரா ஒலிம்பிக்கின் கண்கவர் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 2 மணிக்கு நடைபெறுகிறது. பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்ற தேவேந்திரா ஹஜ்ஹாரியா உட்பட 17 பேர் ரியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.75 லட்சம், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணி:

மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் பாத்தி, சரத் குமார், ராம்பால் ஷாகர் (உயரம் தாண்டுதல்), பூஜா (வில்வித்தை), சுந்தர் சிங் குர்ஜார், தேவேந்திரா ஹஜ்ஹாரியா, ரிங்கு, நரேந்தர் ரன்பிர், சந்தீப் (ஈட்டி எறிதல்), அமித் குமார் சரோஹா, தரம்பிர் (கிளப் த்ரோ), தீபா மாலிக் (குண்டு எறிதல்), அங்குர் தமா (1500 மீட்டர் ஓட்டம்), பாஷா பர்மான் (பளு தூக்குதல்), சுயாஷ் நாராயண் யாதவ் (நீச்சல்), நரேஷ் குமார் சர்மா (துப்பாக்கி சுடுதல்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்