தியோதர் டிராபியை வென்றது தமிழகம்

By செய்திப்பிரிவு

தியோதர் டிராபிக்கான இறுதிப் போட்டியில் தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா புளூ அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

விசாகப்பட்டிணத்தில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப் புக்கு 303 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 91 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் விளாசினார்.

ஜெகதீசன் 55, பாபா இந்திரஜித் 31, விஜய் சங்கர் 21 ரன்கள் எடுத்தனர். இந்தியா புளூ அணி தரப்பில் தவால் குல்கர்னி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 304 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா புளூ அணி 46.1 ஓவரில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக குர்கீரத் சிங் 64, ஷிகர் தவண் 45, ஹர்பிரித் சிங் 36, மணீஷ் பாண்டே 32 ரன்கள் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் ரகில் ஷா 3, முகமது மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர். 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி கோப்பையை வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்