தென் மண்டல பல்கலை. கிரிக்கெட்: ராஜமுந்திரி அணியை வென்றது சென்னை அண்ணா பல்கலை. அணி

By செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தென் மண்டல அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி 2-வது நாளாக நேற்று திருச்சி ஜெ.ஜெ கல்லூரியில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய திருப்பதி ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யாபி பல்கலைக்கழகம் 29.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குண்டூர் கே.எல்.ஈ.எஃப். பல்கலைக்கழகம் 14.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 92 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் முதலில் விளையாடிய கேரளா கோழிக்கோடு பல்கலைக்கழகம் 30 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மைசூர் பல்கலைக்கழகம் 30 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மற்றொரு போட்டியில் ராஜமுந்திரி அணியுடன் விளையாடிய சென்னை அண்ணா பல்கலை. அணி வெற்றி பெற்றது. ராஜமுந்திரி ஆதிகவி நன்னய்யா பல்கலைக்கழக அணி 22.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த ஆட்டத்தில் விளையாடிய பெல்காம் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய காந்தி கிராமம், காந்தி கிராம கழக பல்கலைக்கழக அணி 28 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

மற்றொரு போட்டியில் முதலில் விளையாடிய ஷிமோகா வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அறிவியல் கல்லூரி அணி 20.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய அனந்தபுரமு ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டிகளில் அனந்தபுரமு ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக அணியின் ஜெயராமுலு ஆட்டமிழக்காமல் 65 ரன்களும், காந்தி கிராம பல்கலைக்கழக அணியின் அனந்த நாராயணன் ஆட்டமிழக்காமல் 67 ரன்களும், பெல்காம் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக அணியின் பிரதிக் ஷ் ஆட்டமிழக்காமல் 67 ரன்களும், மைசூர் பல்கலைக்கழக அணியின் அஸ்வின் குமார் ஷெட்டி 52 ரன்களும், குண்டூர் கே.எல்.ஈ.எஃப். பல்கலைக்கழக அணியின் சவுரவ் கவாஸ் ஆட்டமிழக்காமல் 49 ரன்களும் எடுத்து சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

பந்து வீச்சில் குண்டூர் கே.எல்.ஈ.எஃப். பல்கலைக்கழகத் தைச் அணியின் அப்துல் பஜார், மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமரத மற்றும் மஞ்சுநாத், அண்ணா பல்கலைக்கழக அணியின் வாசுதேவன், பெல்காம் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக அணியின் விகாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

80 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் இந்த 10 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 mins ago

தமிழகம்

19 secs ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

47 mins ago

வாழ்வியல்

38 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்