நியூஸிலாந்து தொடருக்கான அட்டவணை வெளியீடு

By பிடிஐ

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்ட வணையை நேற்று வெளியானது. வழக்கமாக பிசிசிஐதான் போட்டி விவரங்களை வெளியிடும்.

ஆனால் முதன் முறையாக இந்திய அணி வீரர்களை கொண்டு போட்டி அட்டவணையை வெளி யிட செய்துள்ளது பிசிசிஐ. டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, முகமது ஷமி ஆகியோர் டுவிட்டர் வழியாக போட்டி அட்டவணையை வெளியிட் டனர்.

இதன்படி முதல் டெஸ்ட் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2-வது டெஸ்ட் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரையும், 3-வது டெஸ்ட் கொல் கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அக்டோபர் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்தப்படும் எனவே பிசிசிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட அட்டவணையில் எல்லா போட்டி களுமே காலை 9.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் அக்டோபர் 16-ம் தேதி தர்மசாலாவிலும், 2-வது ஆட்டம் 19-ம் தேதி டெல்லியிலும், 3-வது ஆட்டம் 23-ம் தேதி மொகாலியிலும், 4-வது ஆட்டம் 26-ம் தேதி ராஞ்சியிலும், 5-வது ஆட்டம் 29-ம் தேதி விசாகப்பட்டிணத்திலும் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்