அக்‌ஷர் படேல் அணியில்: இந்தியா முதலில் பேட்டிங்

By செய்திப்பிரிவு

தரம்சலாவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தியா 7 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்தும், ரஹானே 16 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.

இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இலக்கைத் துரத்த டிவைன் பிராவோ முடிவு செய்தார். தோனியும் டாஸ் வென்றிருந்தால் பீல்டிங்கைத் தேர்வு செய்திருக்கக் கூடும் என்று கூறினார்.

டெல்லியில் 40 ரன்களுக்க்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அமித் மிஸ்ரா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. இவருக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் ரவி ராம்பாலுக்குப் பதிலாக உயரமான வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பிட்ச் வேகப்பந்து வீச்சிற்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து இதே மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்