ஐபிஎல்: மேட்ச் பிக்ஸிங் செய்ய தோனி ஒப்புக்கொண்டாரா?- தனியார் தொலைக்காட்சி செய்தியால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஒப்புக் கொண்டார் என குருநாத் மெய்யப்பன் கூறுவதாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியிலிருந்து.

ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீஸாரின் அறிக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், சூதாட்ட புக்கி விண்டு மற்றும் பவண் ஆகியோரிடையேயான தொலைபேசி உரையாடல்கள் எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில், குருநாத் மெய்யப்பனும், விண்டுவும் கடந்த 2013 மே 12, 15 உள்ளிட்ட தேதிகளில் பேசிக் கொள்வது பதிவாகியுள்ளது. அதில் போட்டி நடக்கும் விவரங்கள், தோனி, ரெய்னாவை குருநாத் மெய்யப்பன் அணுகியது, மேட்ச் பிக்ஸிங் செய்ய தோனி ஒப்புக் கொண்டதாக குருநாத் கூறுவது உள்ளிட்டவை பதிவாகியுள்ளதாகக் கூறப்ப டுகிறது.

ரெய்னா விளையாடுவதும், கேட்ச் முறையில் ஆட்டமிழப்பதும் விவாதிக்கப்படுகின்றன.

இதில், விக்ரம் என்பவரின் பெயரும் மேலும் சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. குருநாத் மெய்யப்பன், “இல்லை நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்” எனக் கூறுவதும், சில விஷயங்களை பைசா (காசு) கணக்குகளில் கூறுவதும் பதிவாகியுள்ளது.

இந்த சூதாட்டத்தில் ஐபிஎல் முக்கிய நிர்வாகிகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படு கிறது.

மேட்ச் பிக்ஸிங் செய்வதற்கு தோனி ஒப்புக் கொண்டதாக, குருநாத் மெய்யப்பன் கூறுவதாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிஷண் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இவ்விஷயம் தங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்