ஆஸி. டெஸ்ட் தொடர் இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

By பிடிஐ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ள 21 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கோல் கீப்பர் ஜேஷ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதித்த இந்திய அணி, எப்.ஐ.எச். சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியா சென்று விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் டிசம்பர் 6 முதல் 14-ம் தேதி வரை ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 4 முதல் 19 வரை பெர்த்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வரும் 29-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதுகிறது இந்தியா. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 4-ம் தேதியும், எஞ்சிய 3 போட்டிகளும் முறையே 5, 8, 9 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகின்றன.

இது தொடர்பாக ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் நரீந்தர் பத்ரா கூறுகையில், “இந்தியா-ஆஸி. இடையிலான இந்த டெஸ்ட் தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.

அணி விவரம்கோல் கீப்பர்: ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங்.

தடுப்பாட்டம்: குர்பஜ் சிங், ரூபிந்தர் பால் சிங், வி.ஆர்.ரகுநாத், பைரேந்திர லகரா, கோதாஜித் சிங், குருஜிந்தர் சிங், ஹர்பிர் சிங் சாந்து.

நடுகளம்: மன்பிரீத் சிங், எஸ்.கே.உத்தப்பா, சர்தார் சிங், தரம்வீர் சிங், டேனிஸ் முஜ்தபா, சத்பிர் சிங்.

முன்களம்: நிகின் திம்மையா, எஸ்.வி.சுநீல், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், லலித் உபத்யாய்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்