புனே கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கம்: புதிய கேப்டனாக ஸ்மித் நியமனம்

By பிடிஐ

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆடும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்தி ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ளன. இந்நிலையில் இதில் ஆடும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புனே அணியின் கேப்டனாக நிய மிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்ட 8 அணிகளில் தோனி தலை மையிலான புனே அணி 7-வது இடத்தையே பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, “கடந்த ஐபிஎல் போட்டியில் புனே அணி சிறப்பாக ஆடவில்லை. அதனால் இந்த ஐபிஎல் போட்டியில் திறமை யான இளம் வீரர் ஒருவரை அணிக்கு கேப்டனாக நியமிக்க முடி வெடுத்தோம். அதனால் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளோம்.

இந்த முடிவை தோனியிடம் கூறியபோது அவரும் அதை ஏற்றுக்கொண்டார். கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டாலும் புனே அணியின் ஒரு முக்கிய அங்கமாக தோனி தொடர்ந்து நீடிப்பார். அவர் மீது நாங்கள் மிகவும் மதிப்பு வைத் துள்ளோம்” என்றார்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கடந்த ஆண்டு புனே அணிக்கும் கேப்டனாக தோனி இருந் துள்ளார். அவரது தலைமையின் கீழ் சென்னை அணி 2 முறை ஐபிஎல் கோப்பையை வென் றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்