ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே அதிரடி சதத்தில் மூழ்கியது இலங்கை அணி

By செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிராக நடைபெறும் பயிற்சி ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்க்கு 382 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 294 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியது.

மும்பை பிரபர்ன் மைதானத்தில் இன்று நடைபெறற இந்த ஒருநாள் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்தியா ஏ அணியை பேட் செய்ய அழைத்தது.

ரோகித் சர்மா, உன்முக்த் சந்த் தொடக்கத்தில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடி 13வது ஓவரில் 96 ரன்களை எடுத்தனர். உன்முக்த் சந்த் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து சங்கக்கரா கேட்ச் பிடிக்க கமகே பந்தில் வெளியேறினார்.

அதன் பிறகு ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் மணீஷ் பாண்டே. இருவரும் இலங்கைப் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். 27 ஓவர்களில் இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்காக 284 ரன்களை விளாசித் தள்ளினர்.

ரோகித் சர்மா 111 பந்துகளில் 18 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 142 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். மணீஷ் பாண்டே, 113 பந்துகளில் 15 பவுண்டரி ஒரு சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

கேப்டன் மனோஜ் திவாரி 26 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணியில் 10 பவுலர்கள் வீசினர். தம்மிக பிரசாத் என்ற வேகப்பந்து வீச்சாளர் 6 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்ற வீச்சாளர்களில் கமகே சிக்கனமாக வீசினார்.

கரண் சர்மா அபார பந்து வீச்சு:

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா ஏ சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா 10 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தவல் குல்கர்னி மற்றும் காஷ்மீர் சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை அணியில் உபுல் தரங்கா மட்டுமே அதிகபட்சமாக 76 ரன்களை எடுத்தார். தில்ஷன் 14 ரன்களில் வெளியேறினார். சங்கக்காரா 34 ரன்களையும் மகேலா ஜெயவர்தனே 33 ரன்களையும் எடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 3 ரன்களில் வெளியேறினார்.

26வது ஓவர் முடிவில் இலங்கை 146/4 என்று இருந்தது. ஆட்டத்தின் எந்த நிலையிலும் வெற்றி பெறும் நிலையில் இலங்கை இல்லை.

அபாரமாக வீசியுள்ள கரண் சர்மா, இலங்கையின் தில்ஷன், ஜெயவர்தனே, தரங்கா, மேத்யூஸ் ஆகியோரது முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவல் குல்கர்னியும் 7 ஓவர்களில் 41 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

24 mins ago

சுற்றுச்சூழல்

34 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

50 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்