ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல்

By பிடிஐ

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் ஊடகப் பிரதிநிதி பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகியுள்ளார்.

தனது இந்த முடிவு குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:

நான் ஏற்கெனவே எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன். நான் இந்தப் பதவியில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். சொந்த வேலைகள் காரணமாக தற்போது விலக முடிவெடுத்தேன், என்றார்.

ஊடகத்தில் வர்ணனையாளர், தொலைக்காட்சி நிபுணர் குழுவில் அங்கம், கிரிக்கெட் பத்தி என்று அவர் பல காரணங்களைக் கூறியுள்ளார்.

ஆனால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தன்னை தேர்ந்தெடுக்காதது அவரிடத்தில் ஆழமான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

இவரது இந்த முடிவு குறித்து பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “சவுரவ் (கங்குலி) போலவே ரவி சாஸ்திரியும் உணர்ச்சிவசப்படுபவர். தான் மறுக்கப்பட்டது குறித்து அவர் இன்னமும் சமாதானம் அடையவில்லை. பிசிசிஐ பரிந்துரையின் பேரில் அவர் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் இந்தப் பணியை ஏற்றுக்கொண்டார் தற்போது அந்தப் பொறுப்பில் தொடர அவர் விரும்பவில்லை. மேலும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் அது ஒன்றும் பெரிய பொறுப்பும் அல்ல என்று ரவி சாஸ்திரி இப்பொது கருதியிருக்கலாம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்