இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹோல்டர் தலைமை மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு

By இரா.முத்துக்குமார்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி ஜேசன் ஹோல்டர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின், அவரே கணித்தது போல், நீக்கப்பட்டார்.

இடது கை பேட்ஸ்மென் லியான் ஜான்சன் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். சமீபகாலங்களில் சோபிக்காத அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச்சுக்கும் அணியில் இடமில்லை.

2003-ம் ஆண்டு முதல் மே.இ.தீவுகளுக்கு ஆடிவரும் ஜெரொம் டெய்லர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக தெரிவித்திருப்பதால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் இவர் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவார்.

12 வீரர்கள் கொண்ட அணியில் ஷானன் கப்ரியேல் மட்டுமே சிறப்பு வேகப்பந்து வீச்சாளர். கார்லோஸ் பிராத்வெய்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களாவர். ஆனால் அபாய லெக்ஸ்பின்னர் தேவேந்திர பிஷூ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுனில் நரைன் இல்லை.

ஜூலை 21-ம் தேதி ஆண்டிகுவாவில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது, பிறகு ஜமைக்கா, செயிண்ட் லூசியா, மற்றும் டிரினிடாடில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி வருமாறு:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் பிராத்வெய்ட் (துணை கேப்டன்), தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ராஜேந்திர சந்திரிகா, ராஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச் (வி.கீ.), ஷானன் கப்ரியேல், லியான் ஜான்சன், மர்லன் சாமுவேல்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

13 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்