ஹாக்கி: பெல்ஜியத்திடம் காலிறுதியில் இந்தியா தோல்வி: பதக்க வாய்ப்பை இழந்தது

By செய்திப்பிரிவு

ஹாக்கியில் வெண்கலமாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போனது, காலிறுதியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

முதலில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார், ஆனால் பெல்ஜித்தின் செபாஸ்டியன் டாக்கியர் 2 கோல்களை அடிக்க பெல்ஜியம் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்திய அணி சமன் செய்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, கடைசி கவுன்ட்டர் அட்டாக்கில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் 3-வது கோலை அடித்து இந்திய வாய்ப்புக்கு ‘சீல்’ வைத்தார்.

பெல்ஜியத்தின் பாஸ்கள் கால்பந்தில் மெஸ்ஸி, நெய்மர் கொண்ட பார்சிலோனாவின் பாஸ் போல் அபரிமிதமானது, மலையை முறியடிப்பது போல்தான் இந்திய அணிக்கு இந்தப் போட்டியாகும்.

ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக ஆகாஷ் தீப் சிங் முதல் கோலை அடித்து முதல் கால் மணி நேர ஆட்டத்தில் பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி அளித்தார், இன்னொரு காரணம் பெல்ஜியம் வீரர் டாம் பூனுக்கு பச்சை அட்டைக் காண்பிக்கப்பட்டதால் 10 வீரர்களுக்கு சிறிது நேரம் அந்த அணி குறுக்கப்பட்டது.

2-வது கால் மணி நேர ஆட்டம் அதிக நிகழ்வுகள் இன்றி முடிவடைய இந்திய அணி முன்னிலையை தக்க வைத்தது, ஆனால் 3-வது கால் மணிநேர ஆட்டத்தில் பெல்ஜியம் தங்களது உத்தியை மாற்றியது, இதனையடுத்து ஆக்ரோஷம் கூடியது இந்த கால் மணி ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருந்த போது செபாஸ்டியன் டாக்கியர் அருமையான கோலை அடித்தார், 1-1. அதன் பிறகு மீண்டும் ஸ்ரீஜேஷ் ஒரு அருமையான தடுப்பைச் செய்தார். ஆனால் மீண்டும் பெனால்டி கார்னராக டாக்கியர் கோலாக மாற்றினார்.

4-வது கால் மணியில் பெல்ஜியம் 3-வது கோலை அடித்தது, இதுவும் தடுப்பாட்டம் வலுவாக இருந்த போதும் பெல்ஜியத்தின் இடைவெளி கண்டுபிடிக்கும் திறமையால் கோலாக மாற்ற முடிந்தது.

மீண்டும் இந்திய பயிற்சியாளர் ஆல்ட்மன்ஸ் ஸ்ரீஜேஷை வெளியே அழைத்து ரகுநாத்தை ஸ்வீப்பர் கீப்பராக அனுப்பி 11 வீரர்களூடன் இறுதி அழுத்தம் கொடுத்துப் பார்த்தது, ஆனால் பெனாலி கார்னர் கூட கிடைக்கவில்லை, இந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி பதக்கக் கனவு மீண்டுமொரு முறை நிறைவேறாத கனவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்