500-வது டெஸ்ட் போட்டியை காண அசாரூதீனுக்கு பிசிசிஐ அழைப்பு

By பிடிஐ

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதனை நினைவு கூரும் வகையில் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு வெள்ளி நாணயம் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து கவுரவப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் கேப்டன்களான சந்து போர்டே, வெங்சர்க்கார், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், காந்த், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டனான முகமது அசாரூதீன் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியானது. கடந்த 2000-ம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம், அசாரூதீனை விடுவித்த பின்னரும், இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுக்காமல் தவிர்த்து வந்தது.

இந்நிலையில் கான்பூரில் நடை பெறும் 500-வது டெஸ்ட் போட்டியை காண நேரில் வருமாறு அசாரூதீ னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தின் செயலாளர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,

‘‘அசாரூதீன் தவறு ஏதும் செய்யவில்லை. அவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்தான். சச்சின், வெங்கசர்க்கார், ஸ்ரீகாந்த், அசாரூதீன் ஆகியோர் எங்களது அழைப்பை ஏற்று கான்பூர் டெஸ்ட் போட்டியின் போது நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள் கின்றனர். இதை அவர்கள் உறுதி யும் செய்துள்ளனர்’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

13 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்