ஐசிசி தரவரிசை: விராட் கோலியை நெருங்கும் ரோஹித் சர்மா; ஷிகர் தவண், குல்தீப் யாதவ் ஏற்றம்

By பிடிஐ

ஐசிசி தரவரிசையில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், குல்தீப் யாதவ் அபார முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆல்ரவுண்டருக்கான தரவரிசைப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

துபாயில் நேற்றுமுன்தினம் ஆசியக் கோப்பைப் போட்டிகள் நடந்து முடிந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பங்கேற்று 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 317 ரன்கள் குவித்தார். இதையடுத்து, ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே ஏறக்குறைய 40 புள்ளிகள் இடைவெளி இருக்கிறது.

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ரோஹித் சர்மா 2-ம் இடத்துக்கு முன்னேறுவது இந்த ஆண்டில் இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த ஜூலை மாதம் 2-வது இடத்துக்கு முன்னேறி இருந்தார்.

ஆசியக் கோப்பைத் தொடரில் 342 ரன்கள் குவித்து தொடர் நாயகன் பட்டம் வென்ற, ஷிகர் தவண் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 4 இடங்களில் ஏற்றம் கண்டு 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆசியக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி சிறப்பாக களமாடினார்கள், சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தானுக்காக இருவரும் சதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தரவரிசையாகும்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப்பட்டியலிலில் வங்கதேச வீரர் சஹிப் அல்ஹசனை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 6 இடங்கள் முன்னேறி முதலிடத்தைக்கு உயர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய முதல் வீரர் எனும் பெருமையை ரஷித்கான் பெற்றுள்ளார்.

ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரஷித் கான் 788 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். அடுத்து வரும் உலகக்கோப்பைப் போட்டியில் ரஷித்கான் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷேசாத் 19 இடங்கள் முன்னேறி 36-வது இடத்துக்குச் சென்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் தரவரிசையில் இவரின் சிறப்பான உயர்வாகும். முஜிப் உர் ரஹ்மான்15 இடங்கள் முன்னேறி 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

மேலும், பேட்ஸ்மேன் தரவரிசையில் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் 16-வது இடத்திலும், முஸ்தபிஜுர் 12-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 15 இடங்கள் முன்னேறி 27-வது இடத்திலும், சோயிப் மாலிக் 12 இடங்கள் உயர்ந்து, 42-வது இடத்துக்கும் உயர்ந்துள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் உள்ளன. இதில் இந்திய அணி ஒரு புள்ளியும், ஆப்கானிஸ்தான் 5 புள்ளிகளும் ஈட்டியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை தலா 3 புள்ளிகளை இழந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

சுற்றுலா

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

5 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்