அபாயத்தில் மொகமது ஆமிர்: இருமுறை நடுவர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மான்செஸ்டரில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தானுக்கு எடுத்த எடுப்பிலேயே சிக்கல் ஆரம்பித்து விட்டது.

 

இன்னின்சின் 3வது ஓவரை ஆமிர் வீசும் போது ஓடி வந்து பந்தை வீசிவிட்டு வீச்சை முடிக்கும் போது பிட்சிற்குள் ஓடினார். இதனையடுத்து நடுவர் முதல் எச்சரிக்கை விடுத்தார். அதாவது அதிகார பூர்வ முதல் எச்சரிக்கை.

 

பிறகு இன்னிங்சின் 5வது ஓவரின் 5வது பந்தை ராகுலுக்கு வீசும்போதும் பந்து வீச்சை முடித்து விட்டு பிட்சிற்குள் ஓடிவந்தார். இப்போது 2வது முறையாக எச்சரிக்கப்பட்டார்.

 

இன்னொரு முறை பிட்சிற்குள் அவர் பந்து வீசி முடித்து ஓடி வந்தால் அவர் இந்தப் போட்டியில் இனி பந்து வீச முடியாது, இது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

 

ஆனால் ஆமிர்தான் வீசி வருகிறார். ரோஹித் சர்மா 20 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்களுடனும் ராகுல் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 32/0.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்