தொடர் தோல்வி...எங்குதான் தவறு? இது தெரிந்தால் நான் தான் கோச்: தெ.ஆ ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் வெறுப்புக் கிண்டல்

By பிடிஐ

உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 3வது தோல்வியைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் வெறுப்படைந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், தோல்விகளுக்குக் காரணம் தெரிந்தால் நான் தான் தலைமைப் பயிற்சியாளர் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

 

இங்கிலாந்து, வங்கதேசம், இந்திய அணிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தொடர் தோல்விகளை உலகக்கோப்பையில் சந்தித்து வருகிறது.  இப்போது 6 போட்டிகளில் 5 போட்டிகளிலாவது தென் ஆப்பிரிக்கா வென்றாக வேண்டும்.

 

இந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்ன என்று தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸிடம் கேட்ட போது, வெறுப்புக் கிண்டலுடன், “ஊம்.. என்னிடம் இதற்கு விடையிருந்தால் நான் தான் தென் ஆப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்திருப்பேன்.

 

அடுத்த போட்டியிலிருந்து எல்லாம் எளிதுதான், அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். (கிண்டல்)

 

 தொடர் தோல்விகளினால் அணி வீரர்கள் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர்.  நாங்கள் இன்று இரவு என்ன பிரச்சினை என்பதை கண்டுபிடித்து தீர்வு காண்போம், காலையில் அடுத்த எதிரணிக்குரிய உத்திகளை வகுப்போம்.

 

நான் டுபிளெசிஸ் முதலில் பேட் செய்த முடிவை பற்றி கருத்து கூற விரும்பவில்லை, ஏனெனில் நான் பிட்ச் எப்படி என்று பார்க்கவில்லை. ஆகவே அது பிரச்சினையல்ல.

 

பிட்ச் 100 ஒவர்களுக்கும் நன்றாகத்தான் இருந்தது. கடினமாக இருந்தது.  நிச்சயம் இது நல்ல கிரிக்கெட் பிட்ச்தான் அதில் சந்தேகமில்லை. ஆகவே முதலில் பேட் செய்தோமா அல்லது 2வது பேட் செய்கிறோமா என்பது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதிலை

 

என்னைப் பொறுத்தவரை ரன்கள் எடுத்தேன், நன்றாக வீசினேன் ஆனால் பயனில்லை, அதுதான் ஏமாற்றம்” என்றார் கிறிஸ் மோரிஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

57 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்