ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றது.

கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டீன் எல்கர் 141, டி வில்லியர்ஸ் 64 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. வார்னர் 30, உஸ்மான் கவாஜா 5, ஸ்மித் 5, ஷான் மார்ஷ் 26, பான்கிராப்ட் 77, மிட்செல் மார்ஷ் 5, கம்மின்ஸ் 4, ஸ்டார்க் 2, நாதன் லயன் 47 ரன்களில் ஆட்டமிழந்தனர். டிம் பெய்ன் 33, ஹசல்வுட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. ஹசல்வுட் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 69.5 ஓவர்களில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிம் பெய்ன் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல், ரபாடா ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், பிலாண்டர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. டீன் எல்கர் 14 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹசிம் ஆம்லா நிதானமாக விளையாட எய்டன் மார்க்ரம் சீராக ரன்கள் குவித்தார். ஹசிம் ஆம்லா 80 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு மார்க்ரமுடன் இணைந்து ஆம்லா 76 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.

சிறப்பாக பேட் செய்த மார்க்ரம் 145 பந்துகளில், 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் மிட் ஆன் திசையில் நின்ற கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 20 ரன்களில் நாதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தெம்பா பவுமாவை 5 ரன்களில் வெளியேற்றினார் ஜோஸ் ஹசல்வுட். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 72 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 51, குயிண்டன் டி காக் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்