ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: தங்கப் பதக்கம் வென்றார் மனு பாகர் - ஆடவர் பிரிவில் கவுரவ் ரானா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்

By செய்திப்பிரிவு

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் 235.9 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் கன்யகோர்ன் ஹிரன்போம் 234.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் சீனாவின் கைமான் லு 214.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கவுரவ் ரானா 233.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சகநாட்டைச் சேர்ந்த அன்மோல் ஜெயின் 215.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். அதேவேளையில் சீன வீரர் வாங் 242.5 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் மனு பாகர், ரானா, மகிமா அகர்வால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இதே பிரிவில் சீன அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. பதக்கப் பட்டியலில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் பெற்று 2-வது உள்ளது. சீனா 6 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்லகத்துடன் 14 பதக்கங்களுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

கல்வி

5 hours ago

மேலும்