அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி:வலுவான ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்திய அணி

By செய்திப்பிரிவு

அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது.

மலேசியாவின் இஃபோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்திருந்தது. 2-வது ஆட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக 1-1 என டிராவில் முடித்திருந்தது. இரு ஆட்டங்களின் வாயிலாக ஒரு புள்ளி மட்டுமே பெற்றிருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி நேற்று மோதியது.

முதல் கால் பகுதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 28-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் கிடைத்தது. இதை மார்க் நோல்ஸ் கோலாக மாற்ற 2-வது கால் பகுதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகித்தது. 3-வது கால் பகுதியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள். 35-வது நிமிடத்தில் ஆரன் ஸவீவ்ஸ்கி, இந்திய அணியின் தடுப்பு அரண்களை கடந்து அற்புதமாக பீல்டு கோல் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற முன்னிலையை பெற்றது.

41-வது நிமிடத்தில் டேனியல் பீலும், 43-வது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸூம் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் தலா ஒரு கோல் அடிக்க 3-வது கால் பகுதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற வலுவான முன்னிலையை அடைந்தது. கடைசி கால் பகுதியில் இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர். இதன் பலனாக 52 மற்றும் 53-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகைள ராமன்தீப் சிங் கோலாக மாற்றினார். எனினும் இது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. கடைசி வரை போராடியும் மேற்கொண்டு இந்திய அணி தரப்பில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

இதன் மூலம் 9 புள்ளிகள் பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மாறாக 2-வது தோல்வியை பதிவு செய்த இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. இந்திய அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களில் மலேசியா, அயர்லாந்து அணிகளுடன் மோதுகிறது. - ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

வாழ்வியல்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்